Paristamil Navigation Paristamil advert login

'லியோ' மூன்றாவது சிங்கிள் அறிவிப்பு!

'லியோ' மூன்றாவது சிங்கிள் அறிவிப்பு!

10 ஐப்பசி 2023 செவ்வாய் 15:25 | பார்வைகள் : 4702


தளபதி விஜயின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை ஒரு திருவிழா போல வரவேற்க, தளபதி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழக மட்டுமின்றி, வெளிநாட்டிலும் தளபதியின் 'லியோ' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

லண்டன், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலில் 'லியோ' ப்ரீ புக்கிங் அசால்ட் செய்துள்ள நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட, லியோ படத்தின் போஸ்டர்களை லண்டலின் உள்ள பஸ்களில் ஒட்டி, படக்குழு விளம்பரம் செய்து வருவதாக தகவல்கள் வெளியானது மட்டும் இன்றி, இது குறித்த வீடியோவும் தளபதி ரசிகர்களால் எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

தளபதி ரசிகர்கள் சில தினங்களுக்கு முன்னர் வெளியான, லியோ ட்ரைலரின் வைப்பில் இருந்தே இன்னும் வெளியே வராத நிலையில், நாளைய தினம் 'லியோ' படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதாக படக்குழு, புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளது. இந்த போஸ்டரில் தளபதி விஜய் வெண்ணிற பணிகளுக்கு நடுவே, தன்னுடைய மகள் மற்றும் மனைவியான திரிஷாவுடன் மிகவும் மகிழ்ச்சியாக நடந்து வருகிறார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

ஏற்கனவே லியோ படத்தில் இருந்து, அனிருத் இசையில் வெளியான 'நான் ரெடி' பாடல் மற்றும் 'படாஸ்' ஆகிய பாடல்கள் மாஸ் பாடலாக இருந்த நிலையில், இந்த பாடல் செண்டிமெண்டுடன் கூடிய, மெலோடி பாடலாக இருக்கும் என்பது 'அன்பெனும்' என்கிற வார்த்தையை கேட்க்கும் போதே உணர முடிகிறது. இந்த பாடல் வெளியாகும் நேரம் இதுவரை வெளியிடப்படாத நிலையில், நாளைய தினம் இதுகுறித்த அறிவிப்பு தெரிவிக்கப்படும் என தெரிகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்