பிரான்சில் பிறந்த சிசுக்களுக்கு 'Réanimation' பகுதியில் சிகிச்சைக்கு இடம் இல்லை. SFN
10 ஐப்பசி 2023 செவ்வாய் 15:55 | பார்வைகள் : 5176
SFN என்பது 'La Société française de néonatologie' பிரான்சின் குழந்தைகளுக்கான நரம்பியல் மருத்துவத்துறை. இவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் பிரான்சில், பிறக்கும் போது ஆபத்தான நிலையில் பிறக்கும் குழந்தைகள், குறைந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகளை விசேடமாக பராமரிக்கும் réanimation பகுதியில் கட்டில்கள் இல்லாமை மிக மோசமாக அதிகரித்து வருவது ஆபத்தானது என எச்சரித்து உள்ளது.
கடந்த சில காலமாக குறைபாடுகளுடன் பிறக்கும் சிசுக்களுக்கு 'réanimons' பகுதியில் மிகுந்த அவதானத்துடன் குறைந்தது 28 நாட்கள் வழங்கவேண்டிய சிகிச்சைக்கான பகுதியில் 100%சதவீதம கட்டில்கள் இல்லாமல் போவது மாதம் ஒன்றுக்கு 20% சதவீதம் பல மருத்துவ மனைகளில் நடப்பதாக SFN தெரிவித்துள்ளது.
'La Société française de néonatologie' மருத்துவ துறையின் தலைவர் பேராசிரியர் Jean-Christophe Rozé "குறித்த குழந்தைகளுக்கு பல மருத்துவ இயந்திரங்கள் பொருத்திய படுக்கைகள் தேவை, இவை இல்லாமை இங்கு நீடிக்கிறது, பல மருத்துவ மனைகளில் தாழ்வாரத்தில் வைத்து வைத்தியம் பார்க்கிறோம், மருத்துவ குழுக்களில் 80% சதவீதமானவர்கள் வாரத்துக்கு 50 மணிநேரம் பணியாற்றுகிறார்கள், மேலும் சிறப்பு சேவையாளர்களில் 13% சதவீதமானவர்கள் வாரத்தில் 75 மணிநேரம் பணியாற்றுகிறார்கள் இது ஒரு மோசமான நிலை' என தெரிவித்துள்ளார்.