Paristamil Navigation Paristamil advert login

39 தொகுதிகளிலும் பா.ஜ., சிறப்பு கவனம்!

39 தொகுதிகளிலும் பா.ஜ., சிறப்பு கவனம்!

11 ஐப்பசி 2023 புதன் 09:26 | பார்வைகள் : 6766


தமிழகத்தில் உள்ள, 39 தொகுதிகளிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படும், என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி: லோக்சபா தேர்தலை பொறுத்தவரை, நாங்கள் மிக தெளிவாக இருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி, மீண்டும் வர வேண்டும் என்று, மக்கள் கருதுகின்றனர். அகில இந்திய அளவில், 143 தொகுதிகளில், பா.ஜ., தரப்பில் தனி கவனம் செலுத்தப்படுகிறது. 

தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளில் மட்டுமல்ல; 39 தொகுதிகளிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட உள்ளது. வேட்பாளர் பற்றி பேசவில்லை; தேர்தலுக்கு இன்னும் அவகாசம் உள்ளது. 

தி.மு.க., - எம்.பி., ராஜாவின் சொத்துக்களை, அமலாக்கத் துறை முடக்கி வைத்துள்ளது. ஜெகத்ரட்சகன் வீடுகளிலும் வருமான வரித் துறை, 'ரெய்டு' நடந்துள்ளது. அவை, எந்த அளவுக்கு மக்களின் பணம், தனி நபரின் பணமாக மாறி இருக்கிறது என்பதை காட்டுகிறது. இந்த சோதனை நடவடிக்கைகளில், அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை. 

மணல் விற்பனையில், தமிழக அரசின் அதிகாரிகளே ஈடுபடுவதால், அதை அரசின் குற்றம் என்றே கருதலாம்.  இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்