தி.மு.க., எம்.பி., ராஜாவின் பினாமி சொத்துக்கள் முடக்கம்! ...
11 ஐப்பசி 2023 புதன் 11:40 | பார்வைகள் : 3574
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், தி.மு.க., - எம்.பி., - ஆ.ராஜாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துக்களை முடக்கி வைத்துள்ளதாக, அமலாக்கத் துறை நேற்று அறிவித்துள்ளது.
பெரம்பலுார் மாவட்டம், வேலுார் கிராமத்தைச் சேர்ந்தவர், ஆ.ராஜா, 60; தி.மு.க., துணை பொதுச்செயலர். தற்போது, நீலகிரி லோக்சபா தொகுதி எம்.பி.,யாக உள்ளார்.
இவர், மத்திய தகவல் தொடர்பு, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக, முந்தைய காங்கிரஸ் அரசில் பதவி வகித்த போது, கோவையில், 'கோவை ஷெல்டெர்ஸ் பிரமோட்டர்ஸ் இந்தியா' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு, சட்ட விரோதமாக அனுமதி வழங்கியதாக புகார் எழுந்தது.
நண்பர் பெயரில்
மேலும், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வருமானத்துக்கு அதிகமாக கேரளா, ஊட்டி, கொடைக்கானல், சென்னை, பெரம்பலுார் மற்றும் துபாயில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, பினாமிகள் பெயர்களில் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் மட்டுமின்றி, அமலாக்கத் துறை அதிகாரிகளும் வழக்குப் பதிவு செய்தனர்.
தொடர் விசாரணையில், ஆ.ராஜா, தன் நெருங்கிய நண்பரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் பெயரில் பினாமி நிறுவனம் துவங்கி, சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு வந்தார் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, 2022ல் கோவை மாவட்டத்தில், ஆ.ராஜாவுக்கு சொந்தமான, 55 கோடி ரூபாய் மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை, அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கினர். அதன் தொடர் நடவடிக்கையாக, கோவை உட்பட, தமிழகத்தில் பல பகுதிகளில் உள்ள, ஆ.ராஜாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துக்களை நேற்று முடக்கி உள்ளனர்.
இதுகுறித்து, அமலாக்கத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்கு