Paristamil Navigation Paristamil advert login

பாடசாலை மாணவி பரிதாபமாக விபத்தில் பலி

பாடசாலை  மாணவி பரிதாபமாக விபத்தில் பலி

11 ஐப்பசி 2023 புதன் 03:49 | பார்வைகள் : 6465


அனுராதபுரத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள ஐந்தாமாண்டு  புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த   மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் தலாவ மத்தி பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றுக்கு அருகாமையில் எரிபொருள் தாங்கியொன்று மோட்டார் சைக்கிளில் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. 

அனுராதபுரம் - பாதெனிய பிரதான வீதியில் தலாவ நகர மத்தியில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தலாவ ஆரம்ப பாடசாலையில் தரம் ஐந்தில் கற்கும் தலாவ கரகாட்டவ பிரதேசத்தில் வசிக்கும் 10 வயதான டபிள்யூ, நிசல்யா நெத்சரணி விமலசேன என்ற சிறுமியே இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்