லண்டன் Luton விமான நிலையத்தில் பாரிய விபத்து... விமானங்கள் ரத்து
.jpeg)
11 ஐப்பசி 2023 புதன் 06:28 | பார்வைகள் : 7675
லண்டனிலுள்ள Luton விமான நிலையத்தில் கார் பார்க்கிங்கில் நேற்றிரவு தீப்பற்றி எரிந்துள்ளது.
கார் பார்க்கிங்கின் முதல் தளத்தில் 80 சதவிகிதம் தீயில் கருகிவிட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
நேற்றிரவு 8,47 மணியளவில், விமான நிலையத்தில் கார் பார்க்கிங்கில் தீப்பற்றியதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்துள்ளது.
தீயணைப்புத்துறையினர், ஏராளமான கார்கள் தேசமாகியுள்ளது.
ஆனாலும், உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.
தீ விபத்து காரணமாக, Luton விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக எக்ஸில் தெரிவித்துள்ள விமான நிலைய அதிகாரிகள், இப்போது யாரும் விமான நிலையத்துக்கு வரவேண்டாம் என பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளார்கள்.