லியோ புரமோஷன் நிகழ்ச்சி இந்திய நகரத்திலா?

11 ஐப்பசி 2023 புதன் 10:29 | பார்வைகள் : 6976
தளபதி விஜய் நடித்த ’லியோ’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி துபாயில் நடத்த இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது துபாய்க்கு பதில் ஒரு இந்திய நகரத்தை படக்குழுவினர் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
’லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில் எதிர்பாராத ஒரு சில காரணத்தால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இதனை அடுத்து துபாயில் ஒரு பிரம்மாண்டமான புரமோஷன் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது இந்த புரமோஷன் நிகழ்ச்சி துபாய்க்கு பதிலாக ஹைதராபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியில் அனிருத் இசை நிகழ்ச்சியும் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள விஜய் ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025