Paristamil Navigation Paristamil advert login

லியோ படத்திலிருந்து 3 ஆவது பாடல் வெளியானது…

லியோ படத்திலிருந்து 3 ஆவது பாடல் வெளியானது…

11 ஐப்பசி 2023 புதன் 15:08 | பார்வைகள் : 7031


தளபதி விஜய் நடித்த 'லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரலானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில் இடம்பெற்ற ’அன்பினும்’ என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அனிருத் கம்போஸ் செய்த இந்த மெலடி பாடலை அனிருத் மற்றும் லோதிகா பாடியிருக்க விஷ்ணு எடாவன் எழுதியுள்ளார். இவர்தான் ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு பாடல்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் முதல் முறை கேட்கும் போதே மனதை உருக வைக்கும் அளவுக்கு இருக்கிறது என்று விஜய் ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.