Paristamil Navigation Paristamil advert login

யூதப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் உள்துறை அமைச்சர்!!

யூதப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் உள்துறை அமைச்சர்!!

9 ஐப்பசி 2023 திங்கள் 09:02 | பார்வைகள் : 8154


பிரான்சின்  யூதத் தலைமை ரபான் ஹைம் கொரிசா மற்றும் பிரான்சின் முக்கிய யூத அமைப்புக்களின் தலைவர்கள்,யூதத் தொண்டு நிறுவனங்கள் என யூத சமூகத்தின் முக்கியமானவர்களை இன்று 15h00 மணிக்கு, பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனன் சந்திக்க உள்ளார்.

இந்தத் தகவலை உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எமானுவல் மக்ரோன் ஜேர்மனிக்கு செல்லும் நிலையில், மத்தியகிழக்குப் பகுதியில் இருக்கும் போர் நிலைமைகள் பற்றியும், யூத சமூகம் பிரான்சிடம் என்ன எதிர்பார்க்கின்றது என்பதையும், அறியுமாறு எமானுவல் மக்ரோன் தன்னிடம் கோரியதாக ஜெரால்ட் தர்மனன் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை பிரான்சின் அனைத்து யூதத் தலங்களிற்கும் அதியுச்ச பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்