Paristamil Navigation Paristamil advert login

குற்றத்தடுப்புப் பிரிவினரின் மீது கத்திக்குத்து - விசாரணைகளும் தேடுதலும்!!

குற்றத்தடுப்புப் பிரிவினரின் மீது கத்திக்குத்து - விசாரணைகளும் தேடுதலும்!!

9 ஐப்பசி 2023 திங்கள் 10:04 | பார்வைகள் : 7925


கடந்த சனிக்கிழமை நள்ளிரவிற்கும் ஞாயிறு அதிகாலைக்கும் இடையில் லியோன நகரின் 2வது பிரிவில், குற்றத்தடுப்புப் பிரிவின் (BAC), இரண்டு காவற்துறையினரின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

பத்திற்கும மேற்பட்டவர்கள் இரண்டு குழுவாக மோதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அதனைத் தடுக்க லியோனின் குற்றத்தடுப்ப்புப் பிரிவினர் சென்றிருந்தனர்.

மோதலைத் தடுக்க முயன்ற போது, அவர்கள் காவற்துறையினர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதில் இரண்டு குற்றத்தடுப்புப் பிரிவு வீரர்கள் மீது கத்திக்குத்துத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த வீரர்களிற்கு வைத்தியசிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலின் போது யாருமே கைது செய்யப்பட்டிருக்கவில்லை.

தற்போது, புலனாய்வு மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் தாக்குதல் மேற்பட்டவர்கள் தேடப்பட்டு வருவதாக லியோனின் மாவட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

விசாரணைகள் மிகத் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்