இலங்கை ஜாம்பவான்களின் உலகக்கோப்பை சாதனையை தகர்த்த அவுஸ்திரேலிய வீரர்!
9 ஐப்பசி 2023 திங்கள் 10:30 | பார்வைகள் : 2323
உலகக்கோப்பை தொடரில் குறைந்த இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 31 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இதன்மூலம் அவர் இலங்கையின் லசித் மலிங்காவின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது, உலகக்கோப்பையில் குறைந்த இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் ஸ்டார்க் ஆவார்.
மலிங்கா 25 இன்னிங்ஸ்களிலும், மெக்ராத் (அவுஸ்திரேலியா) மற்றும் முரளிதரன் (இலங்கை) ஆகியோர் 30 இன்னிங்ஸ்களிலும் இந்த சாதனையை படைத்திருந்தனர்.
முன்னதாக, டேவிட் வார்னர் அதிவேகமாக உலகக்கோப்பையில் 1000 ஓட்டங்கள் எடுத்து துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.