Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலின் பிரதான விமானநிலையங்கள் மீது  ஹமாஸ் தாக்குதல்

இஸ்ரேலின் பிரதான விமானநிலையங்கள் மீது  ஹமாஸ் தாக்குதல்

9 ஐப்பசி 2023 திங்கள் 10:34 | பார்வைகள் : 8547


ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேலின் பென்குரியன் விமானநிலையத்தை இலக்குவைத்து ஹமாஸ்ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டு வருவதாக சர்வதேச தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் மத்திய பகுதி மற்றும் டெல் அவியின் புறநகர் பகுதிகளில் பாரிய வெடிப்புசத்தங்கள் கேட்டுள்ளன.

இஸ்ரேலியின் பிரதான விமானநிலையமான பென்குரியன் விமானதளத்தின் மீது தாக்குதலை மேற்கொள்வதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் வீடுகளை இலக்குவைத்தல் உட்பட ஏனைய குற்றங்களிற்காக இந்த தாக்குதலை மேற்கொள்வதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை இஸ்ரேலின் தென்பகுதி நகரமான அஸ்கெலென் மீது ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. மேலும் இதன்போது 100க்கும் மேற்பட்ட ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்