Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கெதிராக  சுவிட்சர்லாந்து கண்டனம்

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கெதிராக  சுவிட்சர்லாந்து கண்டனம்

9 ஐப்பசி 2023 திங்கள் 10:41 | பார்வைகள் : 8926


இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர்த் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதனை கண்டித்து சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சுவிஸ் வெளிவிவகாரங்கள் துறை எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது 

அதாவது உடனடியாக வன்முறையை நிறுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலை கண்டித்துள்ளது சுவிட்சர்லாந்து மட்டுமல்ல, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் ஹமாஸின் தாக்குதல்களை வன்மையாக கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்