இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையில் போர்! காசாவை முற்றுகையிட உத்தரவு
9 ஐப்பசி 2023 திங்கள் 11:15 | பார்வைகள் : 7705
இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையில் உள்ள காசா பகுதி, ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் போர் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது
இந்நிலையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவை விட்டு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மூன்று நாள் மோதல் இடம்பெற்று வருகின்றது
இந்நிலையில் இரு தரப்பிலும் 1,100 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்பொழுது காசாவை முழுமையாக முற்றுகையிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் இல்லை உணவில்லை எரிபொருள் இல்லை முழுமையாக காசாவை முற்றுகையிடுமாறு உத்தரவிட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்
காசாவின் வான்வெளியை கரையோரபகுதியை இஸ்ரேல் தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது.
காசவிற்குள் யார் செல்லவேண்டும் எதனை கொண்டுசெல்ல வேண்டும் என்பதை இஸ்ரேலே தீர்மானிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.