Paristamil Navigation Paristamil advert login

இந்த சத்தம் கேட்டால் மொபைல் போனை முகத்திற்கு அருகில் கொண்டு செல்லாதீர்கள்

இந்த சத்தம் கேட்டால் மொபைல் போனை முகத்திற்கு அருகில் கொண்டு செல்லாதீர்கள்

9 ஐப்பசி 2023 திங்கள் 12:42 | பார்வைகள் : 3122


மொபைல் போனில் இருந்து இந்த மாதிரியான சத்தம் கேட்டால் மொபைல் போனை முகத்திற்கு அருகில் கொண்டு செல்லாதீர்கள். 

அதை பற்றிய தகவலை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

மொபைல் போன் வெடிக்க போகிறது என்பதை நேரடியாக நீங்கள் தெரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் மறைமுகமாக தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் மொபைல் போனிலிருந்து ஹிஸ்ஸ் என்ற சத்தமோ, பாப்பிங் சத்தமோ, அல்லது பிளாஸ்டிக், கெமிக்கல் எரிகின்ற வாசனை ஏற்பட்டாலோ உங்களது போன் வெடிக்க போகிறது என்று அர்த்தம்.

அதாவது, உங்களது போன் மிகவும் சேதமடைந்துள்ளது.

இந்த மாதிரியான நேரங்களில் மொபைல் போனை முகத்திற்கு அருகில் கொண்டு செல்லக் கூடாது. 

உடனே, போனை சார்ஜில் இருந்து அன்பிளக் செய்ய வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், உங்களது போனின் பேட்டரி உப்பியிருந்தாலும் அதனையும் தவிர்க்க வேண்டும். 

போனின் வடிவத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால் இந்த பிரச்னை இருக்கிறது எண்டு கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

முதலில் உங்களது பேட்டரிக்கு அதிக அழுத்தத்தைக் கொடுப்பதை நிறுத்த வேண்டும். ஏனெனில், அதிக அழுத்தம் கொடுப்பதன் மூலம் மொபைல் போன் வெடிக்க வாய்ப்புள்ளது.

உங்களது, பேட்டரி உங்களது கைக்கு கிடைப்பதற்கு முன்பு பல சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. 

சில யூனிட்களில் போதுமான வசதி இல்லாத காரணத்தால் போன் பேட்டரியில் உள்ள சில தயாரிப்பு சிக்கலின் மூலம் மொபைல் போன் அதிகமாக வெப்பமாகலாம்.

முக்கியமாக, நீண்ட நேரம் மொபைல் போனிற்கு சார்ஜ் போடுவதை நிறுத்த வேண்டும். 

அதிக நேரம் சார்ஜ் போடுவதன் மூலம் விரைவில் வெப்பமாகி வெடித்த சிதறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். 

100 சதவீதம் சார்ஜ் ஏறும் வரை காத்திருக்க வேண்டாம், 80 சதவீதமே போதுமானது.       

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்