Vigneux-sur-Seine : கட்டிடம் ஒன்றில் இருந்து கஞ்சா மீட்பு - இருவர் கைது!
9 ஐப்பசி 2023 திங்கள் 13:46 | பார்வைகள் : 14323
Vigneux-sur-Seine (Essonne) நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் இருந்து கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஒக்டோபர் 7, சனிக்கிழமை அன்று காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை ஒன்றின் போதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இங்குள்ள கட்டிடம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். சிறிய சிறிய அளவுகளில் பொதி செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த 10 கிலோ கஞ்சாவினையே காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அதேவேளை, சம்பவ இடத்தில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் Draveil காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


























Bons Plans
Annuaire
Scan