ஓர்லி விமான நிலையத்தில் வேலை நிறுத்தம் - 40% விமான சேவைகள் இரத்து
9 ஐப்பசி 2023 திங்கள் 15:25 | பார்வைகள் : 11748
ஓர்லி சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அடுத்து, ஏராளமான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட உள்ளன.
Inter-Union தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விமான சேவைகளுக்கான கட்டுப்பாட்டு சபை (La Direction générale de l'aviation) விமான நிறுவனங்களுக்கு விமான சேவைகளை மட்டுப்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளது. அன்றைய நாளில் ஓர்லி விமான நிலையமூடாக பயணிக்கும் விமானங்களில் 40% சதவீதமான சேவைகள் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் தங்கள் பயணத்தை பிற்போடும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஊதிய உயர்வு கோரி இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. அதேவேளை அன்றைய நாளில் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan