Paristamil Navigation Paristamil advert login

சுரைக்காய் அல்வா

சுரைக்காய் அல்வா

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9714


 நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு ஒவ்வொரு ரெசிபியை செய்து படைப்போம். அப்படி படைக்கும் போது, ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக செய்ய நினைப்போம். இன்று கடவுளுக்கு சுரைக்காய் அல்வா செய்து கொடுங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் இருக்கும்.

 
மேலும் இதனை வீட்டில் உள்ளோர் மற்றும் வீட்டிற்கு வந்தோருக்கு கொடுத்தால், நல்ல பாராட்டைப் பெறலாம். சரி, இப்போது அந்த சுரைக்காய் அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
 
தேவையான பொருட்கள்:
 
சுரைக்காய் - 3 கப்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
வெதுவெதுப்பான பால் - 3 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 3/4 கப்
பாதாம் - 7 (நறுக்கியது)
 
செய்முறை:
 
முதலில் சுரைக்காயை தோல் நீக்கி நன்கு துருவிக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் சுரைக்காயை சேர்த்து, அதில் உள்ள தண்ணீர் வற்றும் வரை 10 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
 
பின்பு அதில் பால் ஊற்றி, 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
 
பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி, சுரைக்காயானது உலர ஆரம்பிக்கும் போது அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் கிளறி விட வேண்டும்.
 
பின் அதில் பாதாமை சேர்த்து அலங்கரித்து இறக்கி குளிர வைத்து பரிமாறினால், சுரைக்காய் அல்வா ரெடி!!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்