Paristamil Navigation Paristamil advert login

5 மாநில தேர்தல்; மத்திய பிரதேசம் நவ-17, தெலுங்கானா நவ-30:

5 மாநில தேர்தல்; மத்திய பிரதேசம் நவ-17, தெலுங்கானா நவ-30:

9 ஐப்பசி 2023 திங்கள் 20:35 | பார்வைகள் : 2874


லோக்சபா பொதுத்தேர்தலுக்கு முன்னோடமாக பார்க்கப்படும் தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமார் இன்று (அக்.,9) வெளியிட்டார். 5 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் டிச.3ல் வெளியாகிறது.

இந்தாண்டு இறுதியில் தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தெலுங்கானாவில் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியும், ம.பி.,யில் பா.ஜ.,வும், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 2 மாநிலங்களில் காங்கிரசும், மிசோரத்தில் மிசோரம் தேசிய முன்னணி கட்சியும் ஆட்சி செய்து வருகிறது. அடுத்தாண்டில் லோக்சபா பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கான முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல்கள் பார்க்கப்படுகிறது.

இந்த 5 மாநில தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் இன்று (அக்.,9) அறிவித்தார். அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் இரண்டு கட்டங்களாகவும், மற்ற 4 மாநிலங்களிலும் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களுக்கான ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளிவந்ததை அடுத்து இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

மாநிலம் - தேர்தல் தேதி 

மிசோரம் - நவம்பர் 7

சத்தீஸ்கர் (இரு கட்டங்கள்) - நவம்பர் 7, 17

மத்திய பிரதேசம் - நவம்பர் 17

ராஜஸ்தான் - நவம்பர் 23

தெலுங்கானா - நவம்பர் 30

5 மாநில ஓட்டு எண்ணிக்கை - டிசம்பர் 3

முன்னதாக தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கூறுகையில், 'இந்த 5 மாநிலங்களில் மொத்தம் 16.1 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 8.2 கோடி பேர், பெண்கள் 7.8 கோடி பேர். 18, 19 வயதுடைய புது வாக்காளர்கள் 60.2 லட்சம் பேர் உள்ளனர்' என்றார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்