வரும் வெள்ளிக்கிழமை பிரான்சில் மாபெரும் ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தம்.
9 ஐப்பசி 2023 திங்கள் 17:57 | பார்வைகள் : 8122
எதிர்வரும் வெள்ளிக்கிழமை 13/10/2023 வேலைநிறுத்தத்திற்கும், ஆர்ப்பாட்டத்திற்கும் தொழில்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் பொதுப் போக்குவரத்து, பாடசாலைகள், மருத்துவத்துறை போன்ற பல துறைகள் பாதிக்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
CGT தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் Sophie Binet வேலைநிறுத்தம், மற்றும் ஆர்ப்பாட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில். "பிரான்சில் தொழிலாளிகள் பெரும் கோபத்தில் உள்ளனர், விலைவாசிக்கு ஏற்ற சம்பளம் இங்கு கிடையாது, சம்பளத்தில் ஆண், பெண் வேறுபாடு இன்னும் நீடிக்கின்றது, ஓய்வூதிய சீர்திருத்தம் ஓய்வூதியக் காரர்களை பழிவாங்கியுள்ளது இதனை எதிர்த்து நாங்கள் அனைவரும் வரும் வெள்ளிக்கிழமை வீதிக்கு வரவுள்ளோம்" என தெரிவித்தார்.
இந்த வேலைநிறுத்தத்தால் விமான சேவைகள், SNCF தொடரூந்து சேவைகள், RATP சேவைகள், பாடசாலைகள், மருத்துவ சேவைகள் என பல சேவைகள் வரும் வெள்ளிக்கிழமை பாதிக்கப்படவுள்ளது.
இந்த வேலைநிறுத்தத்தால் எந்தெந்த சேவைகள் எத்தனை சதவீதம் பாதிக்கப்படும் என்னும் விபரம் எதிர்வரும் புதன்கிழமை மாலையில் உறுதியாக தெரியவரும் என தொழில்சங்கங்கள் அறிவித்துள்ளன.
விபரங்களை அறிய paristamil.com இணைய செய்தியோடு இணைந்திருங்கள்.