பிரான்சில் சட்டவிரோத வேகத்தடைகள் வாகன ஓட்டுநர்கள் விசனம்.
9 ஐப்பசி 2023 திங்கள் 19:01 | பார்வைகள் : 5421
பிரான்சில் உள்ள வீதிகளில் வேகத்தடைகள் அதிகரித்து வருவதாக மோட்டார், வாகன ஓட்டுநர் சங்கங்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளன. ஓரு வீதியை கடப்பதற்கு பல தடவைகள் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது எனவும் இந்த வேகத்தடைகள் பல சட்டவிரோதமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக துலூஸ் நகரில் 2022 ஆண்டுக்குப் பிறகு 144 புதிய வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கும் மோட்டார் சைக்கிள் சங்கம் FFMC, சட்டம் அனுமதித்த உயரத்தை விடவும் 10 சென்டிமீட்டர் உயரத்துக்கு வேகத்தடைகள் பல இடங்களில் உள்ளது என்றும், நாடுமுழுவதும் உள்ள வேகத்தடைகளில் 30% சதவீதம் சரியான முறையில் இல்லை எனவும் தெரிவிக்கின்றது.
உயரமான வேகத்தடையால் பல மோட்டார் சைக்கிள்கள் விபத்துகளை சந்திப்பதுடன் அதன் ஓட்டுநர்கள் பலர் அங்கவீனர் ஆகும் நிலை ஏற்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அடுத்து வீதிகள் புனரமைப்பு, அமைப்பு வேகத்தடைகள் குறித்து தாம் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.