சோம்பேறி பிச்சைக்காரன்-ஏற்பது இகழ்ச்சி
10 ஐப்பசி 2023 செவ்வாய் 03:15 | பார்வைகள் : 2267
ஒரு ஏரிக்கு பக்கத்து கிராமத்துல ஒரு மீனவர் வாழ்ந்துகிட்டு வந்தாரு
அவரு தினமும் ஏரிக்கு போய் நிறய மீன் பிடிப்பாரு ,
அந்த மீனை எல்லாம் எடுத்துக்கிட்டு பக்கத்துல இருக்குற ஊர் சந்தைக்கு போயி வியாபாரம் செய்வாரு
அந்த மீன் வியாபாரத்துல கிடைக்குற பணத்த வச்சு வீட்டுக்கு தேவையான பொருள் எல்லாம் வாங்கிட்டு வீட்டுக்கு வந்துடுவாரு
அப்படி ஒருநாள் அந்த மீனவர் வீட்டுல இருந்து ஏரிக்கு போகும்போது ஒரு பிச்சைக்காரனை பார்த்தாரு
அந்த பிச்சைக்காரன் மீனவர்கிட்ட உதவி கேட்டான் ,உடனே மீனவர் ஒரு ரூபா காசு கொடுத்தாரு அந்த பிச்சைக்காரனுக்கு
மறுநாளும் அந்த பிச்சைக்காரன் அந்த மீனவர்கிட்ட உதவி கேட்டான் , அந்த பிச்சைக்காரன் மேல பரிதாப பட்ட அந்த மீனவர் திரும்பவும் ஒரு ரூபா காசு கொடுத்தாரு
மூணாவது நாளும் அதே பிச்சைக்காரன் அந்த மீனவர்கிட்ட உதவி கேட்டான், அப்பத்தான் அந்த மீனவருக்கு புரிஞ்சது இவன் ரொம்ப சோம்பேறி பிச்சைக்காரனு
உடனே அவன திருத்தி உதவி செய்ய நினைச்சாரு அந்த மீனவர் ,உடனே அந்த பிச்சைக்காரன் கிட்ட சொன்னாரு நீ நாளைக்கு அந்த மீன் பிடிக்கிற ஏறி கிட்ட வா உனக்கு மிக பெரிய பரிசு தாரேன் அதுக்கு அப்புறம் நீ யாருகிட்டயும் பிச்சையெடுக்க தேவையில்லைனு சொன்னாரு
அத கேட்ட பிச்சைக்காரனுக்கு ரொம்ப சந்தோசம் உடனே நாளைக்கு வரேன்னு சொன்னான்
தனக்கு பெரிய பரிசு கிடைக்க போகுதுன்னு சந்தோசப்பட்ட பிச்சைக்காரனுக்கு அன்னைக்கு தூக்கமே வரல ,அதனால காலைல விடிஞ்சதும் ஏரிக்கு ஓடி போனான் அவன்
ஆனா நேரம் ஆகாததால அந்த மீனவரை அங்க காணோம் ,
தனக்கு முன்னாடியே அங்க வந்து காத்திருந்த பிச்சைக்காரனை பார்த்து மீனவருக்கும் சந்தோசம் வந்துச்சு
தனக்கு என்ன பரிசு கொடுக்க போறீங்கன்னு கேட்டான் பிச்சைக்காரன் ,அதுக்கு அந்த மீனவர் சொன்னாரு எனக்கு கொஞ்சம் உதவி செய் உனக்கான பரிசு கிடைக்கும் பொறுமையா இருன்னு சொன்னாரு
உடனே என்ன உதவின்னு கேட்டான் ,அதுக்கு அந்த மீனவர் இந்த மீன் பிடிக்கிற வலைய எடுத்து எரிக்குள்ள எப்படி போடணும்னு சொல்லி கொடுத்தாரு
உடனே அதே மாதிரி அந்த பிச்சைக்காரனுக்கு செஞ்சான்,அதுக்கு அப்புறமா மீனவர் அங்க இருந்த பாறை மேல உக்காந்து காத்திருக்க ஆரம்பிச்சாரு
பிச்சைக்காரனுக்கு ஒண்ணுமே புரியல இருந்தாலும் மீனவர் மாதிரியே காத்திருக்க ஆரம்பிச்சான்
ரொம்ப நேரத்துக்கு பிறகு அந்த மீனவர் இப்ப நாம விரிச்ச வலைய எப்படி வெளிய எடுக்குறதுனு சொல்லி கொடுத்தாரு
அந்த வலைல நிறைய மீன் மாட்டி இருந்துச்சு , இத பார்த்த பிச்சைக்காரனுக்கு ரொம்ப சந்தோசம் ,அடடா இதுதான் என்னோட பரிசா ,நான் இந்த மீனா வித்து பணத்தை நானே எடுத்துக்கிடட்டுமான்னு கேட்டான்
அப்பத்தான் அந்த மீனவர் அவன் கிட்ட புது மீன் பிடிக்கிற வலைய கொடுத்து ,இதுதான் உனக்கு நான் கொடுக்குற பரிசு ,இப்ப நீ சோம்பேறி பிச்சைக்காரன் கிடையாது ,காலைல வேகமா வேலைக்கு வந்து ,மீன் பிடிக்க வலை விரிச்சு ,போதுமான நேரம் காத்திருந்து ,நிறய மீன் பிடிச்சிருக்க ,
இத நீ தினம் தோறும் செஞ்சு உன்னோட வறுமைய போக்கிக்க இனிமே சோம்பேறி தனமா யாரு கிட்டயும் பிச்சை எடுக்காதன்னு சொன்னாரு
இந்த அதை மூலமா நாம ஒளவையார் சொன்ன ஏற்பது இகழ்ச்சி அப்படினா என்னனு புரிஞ்சிக்கிடலாம்
அதே நேரத்துல “Give a man a fish and you feed him for a day. Teach him how to fish and you feed him for a lifetime” அப்படிங்கிற ஆங்கில Proverbக்கு அர்த்தமும் தெரிஞ்சிக்கிடலாம்