Paristamil Navigation Paristamil advert login

கியூபெக்கில் பாலமொன்று இடிந்து விழுந்து விபத்து...!

 கியூபெக்கில் பாலமொன்று இடிந்து விழுந்து விபத்து...!

10 ஐப்பசி 2023 செவ்வாய் 06:17 | பார்வைகள் : 6819


கியூபெக்கில் பாலமொன்று இடிந்து வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தி விபத்தில் சிக்கி சிலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மவுன்டன் சைக்கிள் உலகக் கிண்ணப் போட்டி நிகழ்வுகளுக்காக அமைக்கப்பட்டிருந்த சிறு பாலமே இவ்வாற உடைந்துள்ளது.

இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்ததாகவும், 10 பேர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடன் சிகிச்சை அளிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறிய பாலம் இடிந்து வீழ்ந்த போதிலும் மவுன்டன் சைக்கிள் உலகக் கிண்ணப் போட்டிகள் திட்டமிட்டவாறு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்