Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

13 ஐப்பசி 2023 வெள்ளி 06:23 | பார்வைகள் : 6123


இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களை மீட்கும், 'ஆப்பரேசன் அஜய்' திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 212 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பினர்.

இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையிலான போர் 7-வது நாளை எட்டியுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி உள்ளது. போர் நடக்கும் இஸ்ரேல் மற்றும் காசாவில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். சிறப்பு விமானம் மூலம் இந்தியர்களை பத்திரமாக மீட்டு வர ''ஆப்பரேன் அஜய்'' எனும் திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது.

இதன்படி நேற்று, இந்தியாவில் இருந்து இஸ்ரேல் புறப்பட்ட விமானம், டெல் அவிவ் நகரில் தரையிறங்கியது. அங்கிருந்து 212 பயணிகளுடன் இந்தியா புறப்பட்ட விமானம், இன்று அதிகாலை டில்லி வந்தடைந்தது. மீண்டு வந்தவர்களை, விமானநிலையத்தில் மத்திய அமைச்சர் சந்திர சேகர் வரவேற்றார்

வர்த்தக‌ விளம்பரங்கள்