ஜனாதிபதி உரை - முழுமையான தகவல்கள்!
13 ஐப்பசி 2023 வெள்ளி 07:00 | பார்வைகள் : 6430
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று வியாழக்கிழமை மாலை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார். எலிசே மாளிகையில் இருந்து அஞ்சல் செய்யப்பட்ட இந்த உரையில், இஸ்ரேல் தாக்குதல் குறித்தும் அங்கு கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்கள் குறித்தும் தகவல்களை வெளியிட்டார்.
இஸ்ரேல் மீது ஹாசா அமைப்பினர் மேற்கொண்டுவரும் தாக்குதலில் இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். நீஸ் தாக்குதலின் பின்னர் அதிகளவானவர்கள் கொல்லப்பட்ட பயங்கரவாத சம்பவம் இது எனவும் மக்ரோன் குறிப்பிட்டார்.
மேலும், இஸ்ரேலில் இதுவரை 17 பிரெஞ்சு மக்கள் காணாமல் போயுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அவர்களில் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பெண்களும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“"நான் இன்று அங்கு காணாமல் போனவர்களின் குடும்பங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன், பிரான்ஸ் இஸ்ரேலிய அதிகாரிகளுடனும், எங்கள் நட்பு நாடுகளுடனும் சேர்ந்து, அவர்களைத் தங்கள் வீடுகளுக்குத் திரும்பக் கொண்டு வர முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது என்பதை நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். பிரான்ஸ் தனது குழந்தைகளை ஒருபோதும் கைவிடாது.!” என மக்ரோன் உறுதியளித்தார்.
அதேவேளை, “"இந்த பணயக்கைதிகள், அவர்கள் எந்த நாட்டினராக இருந்தாலும், அவர்கள் விடுவிக்கப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் அனைத்தையும் செய்வோம்" எனவும் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.