பரிஸ் : பாடசாலை ஊழியர்கள் வேலை நிறுத்தம் - 65,000 மாணவர்கள் பாதிப்பு!
13 ஐப்பசி 2023 வெள்ளி 08:03 | பார்வைகள் : 5521
இன்று ஒக்டோபர் 13, வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் பல்வேறு துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். பாடசாலை ஊழியர்களின் தொழிற்சங்கமும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் 65,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த 70% சதவீதமான ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். சிற்றுண்டிச்சாலை ஊழியர்கள், தூய்மைப்பணியாளர்க, பாதுகாப்பு ஊழியர்கள் என பலர் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
ஊதிய உயர்வு கோரி இந்த வேலை நிறுத்தம் இடம்பெறுகிறது. இந்த வேலை நிறுத்தத்தினால் கிட்டத்தட்ட 65,000 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று பரிசில் இடம்பெற உள்ளது. பிற்பகல் 2 மணி அளவில் Place d'Italie சதுக்கத்தில் இருந்து இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாக உள்ளது.