Paristamil Navigation Paristamil advert login

உலகின் 2 ஆவது மிகப்பெரிய இந்து கோவில் அமெரிக்காவில் திறப்பு

உலகின் 2 ஆவது மிகப்பெரிய இந்து கோவில் அமெரிக்காவில் திறப்பு

13 ஐப்பசி 2023 வெள்ளி 08:28 | பார்வைகள் : 5363


அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் 183 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பிரமாண்டமான பாப்ஸ் சுவாமி நாராயண் அக்ஷர்தாம் கோவில் திறக்கப்பட்டுள்ளது.

அக்ஷர்தாம் என்றால் இறைவனின் புனிதமான இருப்பிடம் என பொருள்படும்.

பரப்பளவில் கம்போடியாவின் அங்கோர்வாட் கோவிலுக்கு அடுத்தப்படியாக உள்ளதால் இக்கோவில் உலகின் 2 ஆவது மிகப்பெரிய இந்து கோவில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இக்கோவிலின் கட்டுமானப்பணியானது தற்போது வரை அமெரிக்கா முழுவதிலும் இருந்து 12 ஆயிரதிற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களால் தொண்டு வழங்கப்பட்டு கட்டப்பட்டு உள்ளது.

கட்டுமானத்தில் சுண்ணாம்பு, இளஞ்சிவப்பு மணற்கல், பளிங்கு மற்றும் கிரனைட் உள்ளிட்ட கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கோவில் வளாகத்தில் 10 ஆயிரம் சாமி சிலைகள், 1 பெரிய கோவில் மற்றும் 12 துணைக்கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

1,000 ஆண்டுகள் தாங்கும் வகையில் மிகப்பெரிய நீள்வட்ட குவிமாடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 18 ஆம் திகதி (புதன்கிழமை) இது பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படுவதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்