உலகின் மிகப்பெரிய பூசணிக்காய்
13 ஐப்பசி 2023 வெள்ளி 08:31 | பார்வைகள் : 4790
அமெரிக்காவின் - கலிபோர்னியா மாநிலத்தில் விவசாயிகளுக்கான போட்டி ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது.
தங்கள் விவசாய நிலங்களில் மிக பெரிய பூசணிக்காய் வளர்ப்பதில் விவசாயிகளுக்கிடையில் இந்த போட்டி இடம்பெறுகின்றது.
நீண்ட காலமாக நடைபெற்று வரும் இப்போட்டியில் இது 50ஆவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் கலந்து கொண்ட டிராவிஸ் என்பவர் மிகப் பெரிய பூசணிக்காய் வளர்த்தமைக்காக வெற்றி பெற்றுள்ளார்.
இதன்படி அந் நபருக்கு 30,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக கிடைக்கப்பெற்றுள்ளது.
டிராவிஸ் 1,247 கிலோகிராம் எடையுள்ள பூசணிக்காயை போட்டியில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் இது உலகின் மிகப்பெரிய பூசணிக்காய் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan