Paristamil Navigation Paristamil advert login

 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான பலப்பரீட்சை

 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான பலப்பரீட்சை

13 ஐப்பசி 2023 வெள்ளி 08:46 | பார்வைகள் : 2661


10 நாடுகள் பங்கேற்றுள்ள 13-வது ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு அணியும் நேற்றுடன் தலா 2 ஆட்டத்தில் விளையாடிவிட்டன. இன்று முதல் 3-வது போட்டியில் ஆடுகின்றன. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிற்பகல் 2 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

உலக கோப்பை என்பதால் மிக கூடுதலான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்த தொடரில் இரு அணிகளுமே தங்களது முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தன.

இதனால் ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது இந்தியாவா? பாகிஸ்தானா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லியில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் இந்தியாவின் அதிரடி நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது.

உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றது இல்லை.

7 தடவையும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் நாளைய ஆட்டத்தில் நம்பிக்கையுடன் விளையாடும்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்