வெளிநாட்டில் இருந்தபடி அரச உதவிப் பணம் RSA பெறமுடியுமா?

13 ஐப்பசி 2023 வெள்ளி 09:20 | பார்வைகள் : 8914
Miamiயில் வசித்துவரும் 4 மில்லியன் சந்ததாரரைக் கொண்ட Youtube பிரபலமான Sebydaddy, "தான் Miamiயில் இருந்தபடி பிரான்சில் முகவரி உள்ளதால் அரசு வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு வழங்கும் RSA உதவித்தொகை மாதமாதம் பெற்று வருகிறேன் " என சில ஆதார பத்திரங்களையும் காண்பித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவு பல மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்ததுடன், பல கேள்விகளையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. குறித்த பதிவு உண்மையானால் அரச இயந்திரத்தில் பல தவறுகள் இருக்கிறது என அரசை நோக்கி விரல்கள் நீளத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ministre des Solidarités 'Sebydaddyயின் பதிவு தவறானது CAFல் அவரது பெயரில் எந்தவிதமான கணக்குகளும் இல்லை அவர் காண்பித்த பத்திரங்கள் போலியானவை" என தெரிவித்துள்ளதுடன். "RSAவில் சில மோசடிகள் நடக்கிறது என்பது உண்மைதான்" எனவும் தெரிவித்தார்.
ஏற்கனவே Toulouse நகரைச் சேர்ந்த ஒருபெண் Molte வசித்தபோது செயலியின் உதவியுடன் மூன்று ஆண்டுகள் (le revenu de solidarité active) RSA உதவிப் பணத்தை பெற்றுவந்தது தெரியவந்ததும், பின்னர் குறித்த தொகைப் பணம் மோசடி செய்த செயல் என நடவடிக்கை எடுக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
le revenu de solidarité active உதவித்தொகை பிரான்சில் வசிக்கும் மக்கள் மட்டுமே பெறமுடியும். அவர் நாட்டைவிட்டு வெளியேறி பிறநாட்டில் வாழத் தொடங்கும் பட்சத்தில் உதவித்தொகையை முறைப்படி ரத்து செய்ய வேண்டும். இல்லையேல் அரச பணத்தை மோசடி செய்த குற்றத்திற்காக உங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.