இஸ்ரேலுக்கு பயணமாகும் வெளியுறவுத்துறை அமைச்சர்!
13 ஐப்பசி 2023 வெள்ளி 14:24 | பார்வைகள் : 4590
பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் (ministre française des Affaires étrangères) இஸ்ரேலுக்கு பயணிக்க உள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சகம் இத்தகவலை நேற்று வியாழக்கிழமை அறிவித்தது. அமைச்சர் Catherine Colonna 'வரும் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலுக்கு பயணிக்க உள்ளார்' என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Israel இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு இதுவரை 12 பிரெஞ்சு நாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 18 பேர் காணாமல் போயுள்ளனர்.
இது தொடர்பாக பிரான்ஸ் கவலையுற்றுள்ளதாகவும், அங்கு சிக்கியிருக்கும் அனைத்து பிரெஞ்சு மக்களையும் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்க அமைச்சகம், முதல்கட்டமாக நேற்றுக் காலை 381 பேரினை அழைத்து வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் ஆரம்பித்து ஒரு வாரத்தின் பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் அங்கு பயணிக்க உள்மை குறிப்பிடத்தக்கது.