'லியோ' பட முதல் விமர்சனம்..!

13 ஐப்பசி 2023 வெள்ளி 15:05 | பார்வைகள் : 7789
தளபதி விஜய் நடித்திருக்கும் ’லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த படம் ’ஜெயிலர்’ மற்றும் ’ஜவான்’ படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் பிரிட்டன் ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் முதல் விமர்சனத்தை பதிவு செய்துள்ளது.
’லியோ’ திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படம் என்றும் இந்த படத்தில் உள்ள ஆக்சன் மற்றும் வன்முறை காட்சிகள் கண்டிப்பாக 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 15 வயதுக்கு குறைவானவர்கள் பார்க்கும் வகையில் இந்த படத்தை அனுமதிக்கப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்த ’மாஸ்டர்’ திரைப்படம் அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் இருந்த நிலையில் ’லியோ’ திரைப்படம் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கும் படம் என்பதால் இது முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025