Corse தீவில் விழுந்து நொருங்கிய விமானம் - நால்வர் பலி

13 ஐப்பசி 2023 வெள்ளி 15:17 | பார்வைகள் : 10236
பிரான்சின் கடல்கடந்த நிர்வாகப்பிரிவான Corse தீவில் விமானம் ஒன்று விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த நால்வர் பலியாகியுள்ளனர்.
தீவின் தெற்கு பகுதியான (Corse-du-Sud) Cap Laurosu நகரின் மேல் பறந்த சிறியரக பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்து நொருங்கியுள்ளது. விமானத்தில் பயணித்த விமானி உள்ளிட்ட நால்வர் பலியாகியுள்ளனர். குறித்த விமானத்தின் இயந்திரம் பழுந்தடைந்திருந்தமையே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் Corse தீவின் ஜொந்தாமினர், விமானத்தின் இயந்திரம் பழுந்தடைந்த நிலையில் இருப்பது ஏற்கனவே விமானியால் அறியப்பட்டிருந்தது என தெரிவித்தனர். தெரிந்துமே பயணிகளை ஏற்றிக்கொண்டு அவர் பயணித்ததாகவும், Cannes நகருக்கு பறபதற்காக முயற்சித்த வேளையில் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025