இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் காலமானார்
13 ஐப்பசி 2023 வெள்ளி 15:22 | பார்வைகள் : 7488
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன். செல்வராசா (77) சுகயீனம் காரணமாக இன்று காலமானார்.
பட்டிருப்புத் தொகுதியில் பெரியகல்லாற்றைப் பிறப்பிடமாக கொண்ட பொன். செல்வராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராவார்.
அண்மைய நாட்களாக நோய்வாய்ப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
இவரது, இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை (15)பிற்பகல் 03 மணியளவில் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan