தேங்காய் பிஸ்கட்
13 ஐப்பசி 2023 வெள்ளி 15:50 | பார்வைகள் : 2734
பிஸ்கட் மேல எல்லாருக்குமே தனி கிரேஸ் கண்டிப்பாக இருக்கும். அதே மாதிரியா தேங்காயை வைத்து ஒரு சூப்பரான பிஸ்கட் செய்து பார்க்க போறோம் ரொம்ப சுலபமாக நம்ம வீட்டிலேயேதேங்காய் பிஸ்கட் செய்து சாப்பிட போறோம் . வாங்க சுவையான சுலபமான மொறுமொறு டேஸ்டான தேங்காய் பிஸ்கட் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
75 கிராம் அன்சால்டட் பட்டர்
1 கப் பொடித்த சக்கரை
1 கப் மைதா மாவு
1/2 கப் பேக்கிங் பவுடர்
1/4 டீஸ்பூன் உப்பு
1/4 கப் வறுத்த தேங்காய் துருவல்
பால் தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அன்சால்டட் பட்டர் போட்டு பீட்டர் வச்சு பட்டரோட கலர் மாற அளவுக்கு நல்லா பீட் பண்ணிக்கலாம். பிறகு பொடித்த சர்க்கரையை சேர்த்து நல்ல ஒன்னோடு ஒன்னு கலக்குற மாதிரி பீட் பண்ணவேண்டும்.
பின் மைதா மாவு, பேக்கிங் பவுடர் , உப்பு முன்றையும்சலித்து சேர்த்து கலந்து கொள்ளவேண்டும். அதில்பொடிச்சாக துருவி வறுத்த தேங்காய் சேர்த்து பிசைந்துவிட வேண்டும்.
இதில் பிஸ்கட் பதத்துக்கு மாவை பிசய் தேவையான அளவு பாலை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து பிசைய வேண்டும். பால் அதிகமா சேர்த்து விட கூடாது அப்படிபால் அதிகமாகி விட்டால். பிஸ்கட்டோட டெக்சர் நல்லா இருக்காது.
ஆகையால் ஒரு சின்ன ஸ்பூன் வெச்சு தேவையான அளவு மட்டும் கொஞ்சம் கொஞ்சமா பால் சேர்த்து கொள்ள வேண்டும். பீஸ்கட் மாவு உள்ள பாத்திரத்தை ஒரு கிளீன் ஷீட் போட்டு கவர் பண்ணி ஃப்ரிட்ஜ்ல ஒரு 30 நிமிஷம் வைத்து பின் எடுக்க வேண்டும்.
இப்படி பிஸ்கட் மாவை 30நிமிஷம் பிரிட்ஜில் வைத்து எடுத்தால் பிஸ்கட்ட கிரிஸ்பியா வரும் . 30 நிமிடத்திற்கு பிறகு பேக்கிங் பாத்திரத்தில் பேக்கிங் சீட் போட்டு இந்த பிஸ்கட் மாவை சின்ன சின்ன உருண்டையா எடுத்து ரொம்ப மொத்தமாகவும் இல்லாமல் ரொம்ப மெல்லியதாகவும் இல்லாம மீடியம் சைஸ்ல பிஸ்கட்ஸை செய்து கொள்ளவும்.
பிஸ்கட் மேல் வறுத்த தேங்காய் துருவலை கொஞ்சமாக தொட்டு பேக்கிங் ஷீட்டில் இடைவெளி விட்டு அடுக்க வேண்டும்.
இடைவெளி விடாமல் அடுக்கினால் பிஸ்கட்டுகள்ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும். பிஸ்கெட்டுகளை 180 டிகிரி ப்ரீஹீட்பண்ணிய ஓவனில் 10 முதல் 15 நிமிடம்வரை பேக்செய்து கொள்ள வேண்டும்.
பிஸ்கட்டுகள் சூடாக இருக்கும் போது ஷாஃப்டாக இருக்கும். ஆறியதும் மொறுமொறு என்று இருக்கும். ஓவனில் இருந்து ப்ளேட்டிற்கு பிஸ்கெட்டுகளை மாற்றியதும் சூப்பரான சுவையான மொறு மொறு க்ரிஷ்ப்பி தேங்காய் பிஸ்கட் தயார்..