இலங்கையில் சீரற்ற காலநிலை - திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்
13 ஐப்பசி 2023 வெள்ளி 16:37 | பார்வைகள் : 3603
நில்வள கங்கையை அண்டிய அக்குரஸ்ஸ, திஹாகொட, மாத்தறை, மாலிம்பட, கம்புருபிட்டிய ஆகிய தாழ்நிலப் பகுதிகளில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தெரிவித்திருந்தார்.
மேலும், ஜிங் கங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும் அதிகரித்து வருகின்றது.
இதனால் இப்பிரதேச மக்களும் வீதிகளில் பயணிக்கும் மக்களும் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, கொழும்பு, கண்டி, புத்தளம், முதலான பகுதிகளில் கடும் மழை ஏற்படக்கூடும் என்பதால், மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நீர்ப்பாசன பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.