உலகக்கோப்பை 2023 - தரவரிசை பட்டியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
14 ஐப்பசி 2023 சனி 06:26 | பார்வைகள் : 9860
இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு நாள் உலகக்கிண்ண
போட்டியின் தரவரிசை பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை இவ்வருடம் இந்தியா நடத்தி வருகின்றது.
இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்றுள்ளனர்.
பங்களாதேஷ் மற்றும் நியூஸிலாந்து அணிகள் மொதிக்கொண்டு இருகின்றார்கள். இந்நிலையில் நிகர ஓட்ட விகிதம் (NRR) வித்தியாசத்தால் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுவரை இடம்பெற்ற 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளை பெற்று தென் ஆப்ரிக்கா அணி முதலிடத்தில் இருகின்றது.
மற்றைய அணிகள் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற போதிலும் நிகர ஓட்ட விகித (NRR) வித்தியாசத்தால் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, நியூசிலாந்து அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
அதுப்போலவே இந்திய அணியும் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
மேலும் இலங்கை அவுஸ்திரேலியா நெதர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் ஒரு போட்டியிலும் வெற்றியை பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

























Bons Plans
Annuaire
Scan