Paristamil Navigation Paristamil advert login

Facebook -ல் Multiple Personal Profile அறிமுகம்: என்னென்ன சிறப்பம்சங்கள்

Facebook -ல் Multiple Personal Profile அறிமுகம்: என்னென்ன சிறப்பம்சங்கள்

14 ஐப்பசி 2023 சனி 06:46 | பார்வைகள் : 2182


சமூக வலைதளமான பேஸ்புக்கில் மல்டிபிள் பர்சனல் ப்ரொபைல் (Multiple Personal Profile) அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் என்னென்ன சிறப்புகள் என்பதை பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் ஒரே ஒரு அக்கவுண்ட் வைத்துக் கொண்டு பல விஷயங்களை பேசிய காலம் போய் யூசர்களின் பல்வேறு விதமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு அம்சங்கள் வந்து விட்டது.
ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப ரீல்ஸ், குரூப், கம்யூனிட்டி, இன்ஸ்டன்ட் மெசேஜ், மார்க்கெட் பிளேஸ் என்ற பல பலன்களை பெறும் வகையில் பல அம்சங்கள் வந்துள்ளன.

ஒரு சிலர் பேஸ்புக்கில், மூவி ரிவ்யூ, புதிய ரெசிபி மற்றும் பாஸ்கெட் பால், அரசியல், சினிமா போன்ற பல வகையான போஸ்ட் மற்றும் கருத்துக்களை ஒரே போஸ்டில் போடும் போது பல குழப்பங்கள் ஏற்படுகிறது.

இதனை ஒழுங்குபடுத்துவதற்காக மல்டிபிள் ப்ரொபைல் (Multiple Personal Profile) என்ற அம்சத்தை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக நீங்கள் யாருக்கு என்ன ஷேர் செய்கிறீர்கள் எனவும், விருப்பப்பட்ட எந்த விஷயங்களை பார்க்கிறீர்கள் என்பதையும் ஒழுங்குபடுத்தலாம்.

அதாவது, நீங்கள் பல்வேறு ப்ரொபைலை உருவாக்கி, ஒவ்வொன்றையும் ஒவ்வொரு அனுபவத்தை பெறுவதற்கு பயன்படுத்தலாம்.

இந்த அம்சமானது, பர்சனல் லைஃபை பிரைவேட் ஆக வைத்துவிட்டு, ப்ரொஃபஷன் சார்ந்த விஷயங்களை உலகிற்கு வெளிப்படுத்த நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். தற்போது படிப்படியாக யூசர்களுக்கு இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

* பேஸ்புக் ஹோமிற்கு சென்று, மெனுவை கிளிக் செய்து உங்களது பெயர் கொண்ட ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

*அதில் ஒரு டவுன்லோட் அம்புக்குறி மற்றும் வெப் வெர்ஷனில் "See all profiles" ஆப்ஷனை கிளிக் செய்தால் "Create new profile" என்ற ஆப்ஷன் தெரியும்.

* இதனை டேப் செய்து "Get started" என கொடுத்து, உங்களுக்கு விருப்பமான ப்ரொபைல் பெயரை உள்ளிடுங்கள்.

* உங்களது பெயரை உறுதி செய்த பிறகு, ப்ரொபைல் பிக்சர், கவர் இமேஜ் மற்றும் யூசர் நேம் ஆகியவற்றை சேர்த்தால் பர்சனல் ப்ரொபைல் (Multiple Personal Profile) உருவாகி விடும்.

* இப்போது உங்களுக்கு விருப்பப்பட்ட காண்டக்ட்களை சேர்த்து கம்யூனிட்டிகளை ஃபாலோ செய்து கொள்ளுங்கள்      

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்