Paristamil Navigation Paristamil advert login

கவிதை, இலக்கியத்தின் காதலன் நேற்று அனியாயமாக சரிந்தான். Arras பள்ளி வளாகம்.

கவிதை, இலக்கியத்தின் காதலன் நேற்று அனியாயமாக சரிந்தான். Arras பள்ளி வளாகம்.

14 ஐப்பசி 2023 சனி 07:00 | பார்வைகள் : 4583


"இலக்கியத்தை இதயத்தில் நேசித்தவன், கவிதையை கண்களால் காதலித்தவன், பிரஞ்சு இலக்கியத்தை மாணவர்களின் மூளைக்குள் இனிக்க வைத்தவன், துணிந்தவன், கலகலப்பான கல்வியாளன், அனியாயமாக கொல்லப்பட்டான் எங்கள் கண்முன்னே" நேற்று (13/10) 20 வயது செச்சென் நாடு பயங்கரவாதியால் படுகொலை செய்யப்பட்ட தங்களின் ஆசிரியர் பற்றி கண்ணீருடன் சக ஆசிரியர்கள், மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் கவலையான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

மூன்று பெண் பிள்ளைகளின் தந்தை, மாணவர்களை தன் பிள்ளைகளாக நேசித்த சிந்தை. பல நூல்களை தேடித்தேடி வாசிப்பார் அதில் சிறந்த நூல்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வார், நாடுமுழுவதும் பயணம் செய்வார், அதில் பிரான்ஸ் தேசத்தின் வரலாறு கூறும் இடங்களை மாணவர்களுக்கு பாடமாக புகட்டுவார். என ஒரு பேராசிரியர் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர் பற்றி குறிப்பிடுகிறார்.

1980களில் Pas-de-Calais பிராந்தியத்தில் Arras நகரில் உள்ள  Gambetta-Carnot கல்லூரிக்குள் முதன் முதலில் காலடி பதித்தார். அவரின் துணைவியாரும் Arras நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஒரு பேராசிரியர். இன்று 57 வயதாகும் குறித்த பேராசிரியர் தான் கற்பித்த Gambetta-Carnot உயர்நிலைப் பள்ளிக்கும், Arras நகரில் உள்ள புகழ்பெற்ற பல்கலைகழகத்திற்கும் ஒரு பாலமாக விளங்கினார், 2000 ஆண்டுகளில் குறித்த பல்கலைக்கழகத்தில் இலக்கியம், சினிமா மற்றும் இசை பற்றிய விரிவுரைகளை வழங்கினார். எனவும் கூறப்படுகிறது.


"முதலில் கொல்லப்பட்ட ஆசிரியர் தலையிட்டு சந்தேகத்திற்கு இடமின்றி பல உயிர்களைக் காப்பாற்றினார்," என்று அதிபர் Emmanuel Macron அவர்கள் நேற்று  தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்