இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இதுவரை கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை
14 ஐப்பசி 2023 சனி 08:29 | பார்வைகள் : 4211
இஸ்ரேல்-ஹமாஸ் படைகளுக்கு இடையே போர் நடைபெற்று வருகின்றது.
இதுவரை 1,799 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய ராணுவ படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே 8வது நாளாக தீவிர சண்டை நடைபெற்று வருகிறது.
காசாவின் எல்லைப் பகுதியில் இசை திருவிழா நடைபெற்று கொண்டு இருக்கும் போது கடந்த சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பினர் தங்கள் தாக்குதலை திடீரென தொடங்கினர்.
இதையடுத்து இஸ்ரேலில் போர் பிரகடனம் அறிவிக்கப்பட்டு பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் தொடர் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் படைகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் இதுவரை 1,799 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் 2 லட்சம் மக்கள் இருப்பிடத்தை விட்டு இடம்பெயர்ந்து இருப்பதுடன், 6,388 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலை பொறுத்தவரை குறைந்தபட்சமாக 1300 பேர் உயிரிழந்துள்ளனர், அத்துடன் 3,227 பேர் போர் நடவடிக்கையால் காயமடைந்துள்ளனர்.