பிரான்சில் தற்கொலை மற்றும் கருணைக்கொலையை அங்கிகரிக்கும் மசோதா வரும் டிசம்பர் மாதத்தில்.
11 ஐப்பசி 2023 புதன் 15:34 | பார்வைகள் : 6541
மாற்றவே முடியாத நோயால் அவதிப்படும் அதிதீவிர நோயாளர்கள், தங்களின் சுய விருப்பத்தின் பேரில் தாங்களாகவே தற்கொலை செய்து கொள்ளவும், இயந்திரங்கள், மாத்திரைகளின் உதவியுடன் அவர்களை கருணைக்கொலை செய்யவும் அனுமதிக்கும் 'Fin de vie' மசோதா பல இழுபறிகளுக்கு பின்னர் வரும் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத் துறையின் அனுமதிப்புக்கள், வெறுப்புகள், கிறிஸ்தவ மதத் தலைவர்களின் தலையீடுகள், பொதுமக்களின் பல்வேறுபட்ட விமர்சனங்கள், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் மத்தியில் தயாரிக்கப்பட்ட குறித்த மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க பல காரணங்களால் இழுத்தடிக்கப்பட்டது.
ஒன்று மக்களுக்கான வரவுசெலவு திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க படாமல் 49.3 எனும் பிரதமரின் அதிகாரத்தை பயன்படுத்தி நிறைவேற்றியது, தற்கொலை மற்றும் கருணைக்கொலையை அங்கிகரிக்காத பாப்பரசர் பிரான்சுக்கு வருகைதந்தது, பொருளாதார நெருக்கடியால் மக்களின் நிலை அரசுக்கு எதிராக இருப்பது போன்ற காரணங்களால் கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய மசோதா வரும் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறுதிப் பெரும்பான்மை இல்லாத Elisabeth Borne தலைமையிலான அரசு குறித்த சர்ச்சைக்குரிய மசோதாவை எப்படி நாடாளுமன்றத்தில் கையாளப்போகிறது என்னும் விவாதங்கள் மும்மரமாக பிரான்ஸ் ஊடகங்களில் நடந்து வருகிறது.