கொழும்பில் ஒன்லைன் மூலம் கடன் தருவதாக ஏமாற்றும் இளம் பெண்

11 ஐப்பசி 2023 புதன் 15:42 | பார்வைகள் : 7974
கொழும்பில் ஒன்லைன் மூலம் கடன் தருவதாக கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர் மோசடிக்கு பயன்படுத்திய 175 சிம் அட்டைகள் மற்றும் 5 ஏரிஎம் அட்டைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் எனவும் சந்தேக நபருக்கு எதிராக பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025