ஒலிம்பிக் 2024 : 93,000 பேருக்கு அழைப்பு விடுத்த Pôle emploi! - புதிய சர்ச்சை!!
12 ஐப்பசி 2023 வியாழன் 07:00 | பார்வைகள் : 5654
ஒலிம்பிக் போட்டிகளின் போது பணிபுரிவதற்காக Pôle emploi இனால் ஒரே நேரத்தில் 93,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
Île-de-France மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளின் பொது பாதுகாப்பு துறையில் பணிபுரிவதற்கான ஒரே நேரத்தில் இத்தனை பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேலை தேடுவோரின் துறையினை (métiers) பொருட்படுத்தாமல் கண்மூடித்தனமாக வேலை வாய்ப்புக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பலர் விற்பனை சார்ந்த தகுதி கல்வி அறிவுடன் இருக்கும் நிலையில், அவர்களுக்கும் இந்த வேலை வாய்ப்பு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பலர் மின்னஞ்சல் தவறுதலாக அனுப்பப்பட்டிருக்கலாம் என கருதுவதாக தெரிவித்துள்ளனர். இதில் இன்னும் மோசமாக, பார்வையற்றோருக்கும் இதுபோன்ற அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.