Paristamil Navigation Paristamil advert login

ரோகித் சர்மாவின் ருத்ர தாண்டவம் ... ஜாம்பவான்களின் சாதனை முறியடிப்பு

ரோகித் சர்மாவின் ருத்ர தாண்டவம் ... ஜாம்பவான்களின் சாதனை முறியடிப்பு

12 ஐப்பசி 2023 வியாழன் 08:06 | பார்வைகள் : 2176


ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா அதிக சிக்சர் அடித்த வீரர் எனும் பாரிய சாதனையை படைத்தார். 

டெல்லியில் நேற்று நடந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானை வீழ்த்தியது.

இந்திய கேப்டன் ரோகித் சர்மா 84 பந்துகளில் 131 ஓட்டங்கள் விளாசினார். இதில் 5 சிக்சர், 16 பவுண்டரிகள் அடங்கும்.

இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்தார். 

ரோகித் மொத்தமாக 556 சிக்சர்கள் அடித்துள்ளார். கிறிஸ் கெய்லின் (553) சாதனையை முறியடித்த ரோகித், ஒருநாள் போட்டிகளில் 297 சிக்ஸர்களையும், டி20யில் 182 சிக்சர்களையும், டெஸ்டில் 77 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார்.

இந்தப் பட்டியலில் ஷாகித் அப்ரிடி (476) , பிரெண்டன் மெக்கல்லம் (398), மார்டின் கப்தில் (383), எம்.எஸ். தோனி (359) , சனத் ஜெயசூரியா (352) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்