Paristamil Navigation Paristamil advert login

மொபைல் போனை பாக்கெட்டில் வைத்தால் புற்றுநோய் வருமா? வெளியான தகவல்

மொபைல் போனை பாக்கெட்டில் வைத்தால் புற்றுநோய் வருமா? வெளியான தகவல்

12 ஐப்பசி 2023 வியாழன் 08:41 | பார்வைகள் : 2173


செல்போனை பாக்கெட்டில் வைத்தால் கேன்சர் வருமா என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்மார்ட் போனின் தேவை
தற்போதைய காலகட்டத்தில் ஒரு வீட்டில் ஐந்து பேர் இருந்தாலும் 5 ஸ்மார்ட் போன்கள் இருக்கின்றன. அந்த அளவிற்கு மொபைலின் தேவை அதிகரித்து உள்ளது. காலை விடியும் முதல் இரவு தூங்கும் வரை மொபைல் இல்லாமல் பெரும்பாலும் இருக்க முடியவில்லை.

குழந்தைக்கு தூங்குவதற்கு கூட மொபைல் போன் தான் தேவைப்படுகிறது. நாம் மொபைலை பயன்படுத்துகிறோம் என்று சொல்வதை விட, மொபைல் தான் நம்மை பயன்படுத்துகிறது என்று கூட சொல்லலாம்.

இந்த மொபைல் போனை, குறிப்பாக பெண்கள் பவுச்சுகளிலோ, பேக்கிலோ தான் வைத்திருப்பார்கள். ஆனால், ஆண்கள் இதனை சட்டை பாக்கெட்டிலோ, பேண்ட் பாக்கெட்டிலோ வைத்திருப்பார்கள். இதனால், ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

மொபைல் போனை அதிகம் பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனநிலை பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வுகள் கூறுகின்றன. மொபைல் போன் அடிக்ஷன் என்பது டிப்ரெஷன், தன்னைப் பற்றி உணர்ந்து கொள்ளாத நிலை மற்றும் தற்கொலை எண்ணங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.

இளம் வயதினர் மொபைல் போனை பயன்படுத்தினால் மன ரீதியாக பாதிப்புகள் ஏற்படும் என்று ஒருபுறம் இருந்தாலும், போனிலிருந்து வெளிவரும் ரேடியேஷன் உடலளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

திரைப்படங்களில் வருவது போல நான்-ஐயனைசிங் ரேடியேஷன் உடலை நேரடியாக பாதிக்காது. இவை ரேடியோ ஃபிரீக்வன்சி (RF) அளவில் தான் மொபைல் போனில் இருந்து வெளிப்படும். ஆனால், இந்த அளவு கூட மானிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இது தொடர்பாக, கனடாவில் உள்ள டிரெண்ட் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்து வெளியிடப்பட்ட தகவலில், "மொபைல் போன்களில் இருந்து வெளியாகும் நான்-ஐயனைசிங் ரேடியேஷன் ஃப்ரீ ரேடிக்கல்சை அதிகரிக்கும். இதனால், கேன்சர் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், மொபைல் போன்களை பாக்கெட்டில் வைத்தால் என்ன ஆகும் என்பது பற்றியும் பல அறிவியல் ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன.

சமீபத்தில், ஆப்பிள் நிறுவனமும், ஆப்பிள் சாதனைகளை உடலில் இருந்து 10 மில்லிமீட்டர் தூரம் தள்ளி வையுங்கள் என்று கூறியிருந்தது. நாம் மொபைல் போனை பயன்படுத்தினால் மூளை கேன்சர் வராது.

ஆனால், ஸ்மார்ட் போன்கள் புற்றுநோயை உண்டாக்கும் அபாயத்தை 60 சதவீதம் அதிகரிக்கும். இதனால், பாக்கெட்டுகளில் யாரும் செல்போனை வைக்க வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மூளை மற்றும் உள்-காதுகள் கேன்சர், டெஸ்டிகுளார் கேன்சர் பாதிப்பு, சில வகையான தொண்டை மற்றும் தைராய்டு புற்றுநோய்களை அதிகப்படுத்தும்.

* பெண்களுக்கு மார்பக புற்றுநோய், ஆண்களுக்கு இனப்பெருக்க பாதிப்பு ஏற்படும்.


* இதய நோய்கள், அதை சார்ந்த புற்றுநோய்கள், மன நலம் சார்ந்த நோய்கள் ஏற்படலாம்.  

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்