Paristamil Navigation Paristamil advert login

அகமதாபாத்தில் 14 ஆம் திகதி  இந்தியா-பாகிஸ்தான் போட்டி

அகமதாபாத்தில் 14 ஆம் திகதி  இந்தியா-பாகிஸ்தான் போட்டி

12 ஐப்பசி 2023 வியாழன் 08:59 | பார்வைகள் : 5712


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வருகிற 14 ஆம் திகதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கிறது.

இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. போட்டி அன்று அகமதாபாத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிவார்கள். போட்டியை நேரில் காண பிரபலங்கள் வருகை தர உள்ளனர்.

இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

7 ஆயிரம் பொலிசார் மற்றும் 4 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் மைதானத்தின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் டிரோன் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்