Paristamil Navigation Paristamil advert login

'ஜப்பான் ' பட இசை வெளியீட்டு விழாவில் சூர்யா....?

'ஜப்பான் ' பட இசை வெளியீட்டு விழாவில் சூர்யா....?

12 ஐப்பசி 2023 வியாழன் 13:18 | பார்வைகள் : 8564


ஜப்பான் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் இசை வெளியீடு சென்னையில் நடைபெற உள்ள நிலையில், 24 இயக்குனர்கள் கவுரவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இயக்குனர் ராஜூ முருகன் இயக்கம் ஜப்பான் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி, அனு இமானுவேல் நடிக்கின்றனர். இப்படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனுடைய ஆடியோ ரிலீஸ் வரும் 28ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக உள்ளது.  இதில் பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மிகவும் பிரமாண்டமாக நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன.

இந்த நிலையில், ஜப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்