Paristamil Navigation Paristamil advert login

புலனாய்வுத்துறைத் தலைமையகத்தில் பயங்கரவாதி!!

புலனாய்வுத்துறைத் தலைமையகத்தில் பயங்கரவாதி!!

15 ஐப்பசி 2023 ஞாயிறு 13:02 | பார்வைகள் : 5054


பா-து-கலேயில் உள்ள அராஸ் நகர லிசேயினுள்  தாக்குதல் நடாத்திய பயங்கரவாதி மொஹமத் மொகுச்கொவ் (Mohammed Mogouchkov) லுவெலுவா - பெரேயில் (Levallois-Perret - Hauts-de-Seine) உள்ள உள்ளகப் புலானாய்வுத் துறையான DGSI அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றான். ஆனால் விசாரைணக்கு பெரிதளவில் இவன் ஒத்துழைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஸ்யக் குடியரசின் அந்தூசியில் பிறந்த இவன் உள்துறை அமைச்சின் தகவலின்படி,  2008 ஆம் ஆண்டு பிரான்சிற்குள் வந்துள்ளான். இவனது தீவிரவாத இஸ்லாம் சார்பின்பின்னர் இவன் மீது புலனாய்வுத் துறையின் கண்காணிப்பு (S)இருந்துள்ளது.

இவனுடன் இணைந்து செயலாற்றியவர்கள் மீதும் கண்காணிப்பு இருந்த நிலையில், தாக்குதலின் பின்னர், இவனுடன் தொடர்புடைய 10 பேர் கைது செய்ப்பட்டுள்ளனர். இதில் ஐவர் இவனது குடும்ப உறவினர்கள்.

இவனது 21 வயதுடைய தமையன் பயங்கரவாதத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவனின் பயங்கவாதத் தாக்குதலிற்கு துணையாய் இருந்த முக்கியமான 5 பேர், பெலரூசியா நாட்டில் உள்ளதாகவும் அவர்களை விசாரிக்க ஏற்ற நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருவதாகவும், புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்