Maisons-Alfort : விடுதி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் - 16 கிலோ கொக்கைன் மீட்பு!
15 ஐப்பசி 2023 ஞாயிறு 17:12 | பார்வைகள் : 5130
விடுதி ஒன்றில் இருந்து இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் கொலம்பியாவைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு Maisons-Alfort (Val-de-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள RER தொடருந்து நிலையம் ஒன்றின் அருகே உள்ள விடுதி ஒன்றில் வைத்து நள்ளிரவு 12.30 மணி அளவில் இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விடுதியில் தங்கியிருந்த குறித்த கொலம்பியா நாட்டவருக்கும் அவரைச் சந்திப்பதற்காக வருகை தந்த ஒருவருக்கும் இடையே மோதல் வெடித்து இருவரும் தாக்குதலில் ஈடுபட்டதாக அறிய முடிகிறது.
அதைத் தொடர்ந்து, கொலம்பிய நாட்டவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் தங்கியிருந்த அறையில் 16 கிலோ கொக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொலம்பிய நாட்டவர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.