Paristamil Navigation Paristamil advert login

மினி பெப்பர் இட்லி

மினி பெப்பர் இட்லி

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10222


 பெரும்பாலானோர் காலை உணவாக இட்லியைத் தான் சாப்பிடுவார்கள். நீங்கள் அப்படி எப்போதும் ஒரே மாதிரி இட்லியை சாப்பிடுபவர்களாக இருந்தால், இந்த முறை மினி பெப்பர் இட்லியை முயற்சித்துப் பாருங்கள். இந்த மினி பெப்பர் இட்லிக்கு எந்த ஒரு சைடு டிஷ்ஷும் தேவையில்லை. மேலும் இந்த மினி பெப்பர் இட்லியானது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த மினி பெப்பர் இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 

 
தேவையான பொருட்கள்: 
 
மினி இட்லி - 12 
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 
குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) 
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் 
கொத்தமல்லி - சிறிது 
உப்பு - தேவையான அளவு 
 
வறுத்து அரைப்பதற்கு... 
 
மிளகு - 1 டீஸ்பூன் 
சோம்பு - 1/2 டீஸ்பூன் 
 
தாளிப்பதற்கு... 
 
எண்ணெய் - 2 டீஸ்பூன் 
 
பூண்டு - 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) 
கறிவேப்பிலை - சிறிது 
 
செய்முறை: 
 
முதலில் இட்லி மாவைக் கொண்டு மினி இட்லிகளை சுட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, அம்மி அல்லது மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். 
 
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். \
 
பிறகு அதில் குடைமிளகாயை சேர்த்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து 3 நிமிடம் நன்கு பிரட்டி, பின் மினி இட்லிகளை சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், மினி பெப்பர் இட்லி ரெடி!!! 
 
குறிப்பு: வேண்டுமானால் மினி இட்லிக்கு பதிலாக சாதாரண இட்லியைக் கொண்டும் இதனை செய்யலாம். அதற்கு சாதாரண இட்லிகளை சுட்டு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்